கிளிநொச்சி , இளம் பெண் வைத்தியரை மிரட்டியமைக்கு பின்னால் என்ன நடக்குது?
கிளிநொச்சி வைத்தியர் பிரியாந்தினியின் அதிரடி நடவடிக்கையால் கதி கலங்கிய மாபியாக்கள் கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கண் வைத்தியநிபுணரின் மருத்துவ அறிக்கை , கிளிநொச்சி தர்மபுரம் இல.1 ஆரம்ப பாடசாலையில் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்தவுடன், அதில் சந்தேமடைந்து அந்த மாணவர்களின் கணிசமான பெற்றோர்களிடம் தொடர்பு கொண்டு பேசினேன்.
அவர்களின் கருத்து எனது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. இதனை தொடர்ந்து கண்டாவளை வைத்திய அதிகாரியை தொடர்பு கொண்டேன் அவர் அப்போது தனது பணியின் பயிற்சி ஒன்றுக்காக விடுமுறையில் இருந்தார்.
இருப்பினும் அவருக்கு இது தொடர்பில் தெரியவில்லை என்பதோடு அவரது அலுவலகத்தில் இது தொடர்பில் அனுமதி பெறவோ அல்லது அறிவிக்கவோ இல்லை என்பதும் அறிந்து கொண்டு மேலும் சிலஅதிகாரிகளை தொடர்பு கொண்டு விடயத்தை ஆராய்ந்த போது இதற்கு பின்னால் வியாபார நோக்கம் இருந்ததை அறிந்து கொண்டு அதனை அம்பலப்படுத்தினேன்.
இதற்கு பின்னர் அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினார்கள் அதன் விளைவுமருத்துவ மாபியாக்களை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது கிளிநொச்சியில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் கடந்த மாதம் கண் பரிசோதனைமேற்கொண்ட தனியார் கண் மருத்துவ நிறுவனம் ஒன்று 71 மாணவர்களுக்கு கண்பாதிப்பு உண்டு எனத் தெரிவித்து அவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள தங்களதுமருத்துவ நிலையத்திற்கு மேலதிக பரிசோதனைக்காக வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.
இதன் போது மேலதிக பரிசோதனை மேற்கொண்டதில் 10 மாணவர்களை தவிர ஏனைய 61 மாணவர்களுக்கும் கண்ணில் பாதிப்பு உண்டு எனவும் இவர்கள் மூக்கு கண்ணாடி பயன்படுத்த வேண்டும் என்றும் குறித்த நிறுவனத்தினரால் தெரிவிக்கப்பட்டு கண்ணாடிகளின் விலைகளும் பெற்றோர்களிடம் தெரிவிக்கப்பட்டு அனுப்பபட்டிருந்தனர்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களில் சந்தேகம் எழுப்பட்ட நிலையில் நடவடிக்கையில் இறங்கிய சுகாதார பிரிவினர் அம்மாணவர்களை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் உள்ள கண் வைத்திய நிபுணரிடம் பரிசோதிக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். அதன்படி படிப்படியாக மாணவர்கள் அழைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அங்கு 71 மாணவர்களில் வருகை தந்த 55 மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 38 மாணவர்களுக்கு கண்ணில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் ஏனைய 17 மாணவர்களுக்கு கண்ணில் சிறு குறைபாடுகள் இருப்பதாகவும் மாவட்ட கண் வைத்தியர் அறிக்கையிட்டிருந்தார் என கிளிநொச்சி மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்தார்.
எனவே இதன் மூலம் தங்களின் வியாபார நடவடிக்கைகளுக்கு ஏழை மாணவர்களை குறித்த நிறுவனம் பயன்படுத்தியமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு இவ்விடயம் தொடர்பில் கல்வி மற்றும் சுகாதார துறையினர் உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருக்க வழிசமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மருத்துவத்துறையின் சுயாதீனத்தினுள் ஊடுருவும் அரசியல் அல்லக்கைகள்சமீபத்தில் தருமபுரத்தில் இடம்பெற்ற மாபெரும் கண்மருத்துவ கொள்ளையினை ஊடகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியமைக்காக புதிதாக நியமனம் பெற்று வந்துள்ள கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரிக்கு தகாத வார்த்தைகளால் பேசும் இன்னொரு வைத்தியரின் தம்பியும் சம்பந்தப்பட்ட நபர் மைத்திரிபால சிரிசேனவின் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளராக வட்டுக் கோட்டை தொகுதி பிரதேச சபை தேர்லில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்.
அரசியல்வாதிகள் பெண் அதிகாரிகளை மோசமாக நடத்த முனையும் செயல்கள் நாட்டில் நடந்தே வருகிறது. அதேபோல வடக்கில் நடந்த செயலும் மிக முக்கியமான ஒன்று. அந்த குரல் பதிவு வீடியோ இது:
மேலே உள்ள காணொளியை செவிமடுக்கும் போது வடக்கின் மருத்துவ கட்டமைப்புக்குள் எவ்வளவு தூரம் அரசியல் உள்நுழைந்து விளையாடுகிறதென்பதை அறிய முடியும். வைத்திய அதிகாரியை மிரட்டும் குறித்த நபர் வலிகாமம் மேற்கு பிரதேச சபை தேர்தலில் சுதந்திர கட்சி சார்பாக போட்டியிட்ட ஒரு சாதாரண நபர்.
அவருக்கு அப்பகுதி மக்களே வாக்களிக்கவில்லை. மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு நபர் மக்களுக்கு சேவையாற்றும் ஒரு மருத்துவ அதிகாரியைப்பார்த்து அடிப்பன், உடைப்பன், மூஞ்சையை கிழிப்பன் என்றெல்லாம் பேசுவதும் தன்னுடைய அரசியல் அதிகாரத்தை வைத்து வேலையை விட்டு கலைப்பன் என்றெல்லாம் சவால் விடுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?
அதற்கு குறித்த பெண் மருத்துவர் துணிச்சலாக நீ யார் என்னை கேள்வி கேட்க என்று அந்நபரிடம் கேட்கிறார் . ஆனால் அவருக்கு மேல் அதிகாரியான கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி( RDHS)குறித்த அந்த அரசியல் இடைத்தரகரான நபரிடம் தனக்கு கீழ் பணியாற்றும் MOH பற்றி முறைப்பாடு செய்ததாக அந்த நபரே கூறுகிறார்.
படித்து பட்டம் பெற்ற ஒரு RDHS அவரின் பதவியின் மதிப்புக்கூட தெரியாமல் ஒரு பிரதேச சபை மெம்பராக கூட இல்லாத ஒரு நபரிடம் MOH ஐ மாற்ற அரசியல் பலத்தை காட்டச்சொல்லி சொல்லியிருக்கிறார் என்கிறபோது அவரின் பதவிக்கு என்ன மதிப்பிருக்கிறது?
இப்படி தற்துணிவற்ற அவர் கீழ்த்தர அரசியலூடாக சாதிக்க நினைக்கும் அவர் வைத்திய அதிகாரியாக இருந்து மக்களுக்கு சேவை செய்வார் என்று எப்படி நம்ப முடியும்?
குறித்த கண்டாவளை M.O.H அதிகாரிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஆளுநருமான சுரேன் ராகவனின் செக்கரட்டி செவ்வேள் கோல் எடுத்ததாகவும், M.O.H ஆன்சர் பண்ணவில்லையென்றும் , நீ என்ன அவ்வளோ பெரிய ஆளா என்று குறித்த அரசியல் அல்லக்கை கேட்கிறார்.
சுரேன் ராகவன் மக்கள் வாக்குகளால் தெரிவுசெய்யப்படாது ஒரு எடுபிடி எம்.பி அவருக்கே இங்கு மரியாதை கொடுக்கத் தேவை இல்லை. இவர் முன்னாள் வடக்கு ஆளுனராக பதவி வகித்தவர் என்பது குறிப்பித்தக்கது.
இந்த மாவட்டத்திற்கு தொடர்பே இல்லாத யாரோ ஒருவர் நியமித்த பாராளுமன்ற உறுப்பினரின் செக்கரட்டியின் கதைக்கெல்லாம் எங்கள் மாவட்டத்தின் வைத்திய அதிகாரி பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமா?
கண்டாவளை M.O.H பிரிவு இப்போதுதான் புத்துணர்வு பெற்று எழுந்துகொண்டிருக்கிறது அதற்கு காரணம் இப்போது அங்கு MOH ஆக பணிக்கு வந்துள்ளDr. Priyaanthini Kamalasingam அவர் துணிச்சலாக மருத்துவத்துறைக்குள் நடக்கும் ஊழல்களை ஒத்துழைப்பின்மையை பொதுவெளியில் பகிர்ந்து வருகிறார்.
ஒரே நாளில் ஒரு கிராமத்தை சேர்ந்த 300 க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கண்ணில் குறைபாடு உள்ளது அவர்கள் கண்ணாடி பாவிக்க வேண்டும் என ஒரு பாடசாலை அதிபர் ஊடாக மாபெரும் மருத்துவ கொள்ளையில் ஈடுபட இருந்த நபர்களை இனம்காட்டி அந்த சம்பவத்தை தடுத்து நிறுத்தியும் இருந்தார். இதுதான் இப்போது இங்கிருக்கும் அரசியல் வால்பிடி அதிகாரிகளுக்கு பிரச்சனையாக உள்ளது.
நேர்மையான அதிகாரிகளை கலைத்து விட்டு ஊழல் வாதிகளை வைத்து எங்கள் பிரதேசத்தை நாசப்படுத்தும் செயற்பாடுகளுக்கு எங்கள் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
கிளிநொச்சி வைத்தியருக்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேகநபர்கள்!
கிளிநொச்சி கண்டாவளை பொது வைத்தியசாலை வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கிளிநொச்சி கண்டாவளை பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தியதுடன் அவரது விடுதிக்குச் சென்ற சிலரும் அவரை அச்சுறுத்தியமை தொடர்பில் தரும்புரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் இதற்கான விசாரணைகள் தருமபுரம் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கைது செய்யும் பொருட்டு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டிருப்பதாகவும் தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தின் போது கடமையிலிருந்த ஏனையவர்களிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட வேண்டியதுடன் சி.சி.ரி.வி கமரா ஒளிப்பதிகள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கட்டுரை எழுதிய பின் , தொலைபேசியில் மிரட்டிய குறிப்பிட்ட நபர் கைதாகியுள்ளார்.
கண்டாவளை MOH Dr.Priyaanthini க்கு தொலைபேசியில் அச்சுறுத்தியவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை 03.02.2022 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதான தர்மபுரம் பொலீஸ் வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
https://www.ceylonmirror.net/70102.html
நன்றி: தமிழ்செல்வனின் (கிளிநொச்சி) பதிவோடு இணைந்த பதிவு