ஐந்து நட்சத்திர ஹோட்டலில் எதிர்க்கட்சி தலைவர்கள் ரகசிய பேச்சுவார்த்தை!
அனைத்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் நேற்று முன்தினம் (27) இரவு கொழும்பு சினமன் கிரவுண்ட் ஹோட்டலில் உள்ள குடீஸ் மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் மாநாட்டாக இந்த சந்திப்பு நடத்தப்பட்டதுடன், பல பேச்சாளர்களை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்திற்கு அனைத்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், அழைப்பை ஏற்று பலர் கலந்துகொண்டமை விசேட நிகழ்வாகும்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கபீர் ஹாசிம், ரணில் விக்கிரமசிங்க, ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், எம்.ஏ. சுமந்திரன், சி.வி. விக்னேஸ்வரன், கஜன் பொன்னம்பலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
ஜே.வி.பி.யை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹரினி அமரசூரிய இணையத்தின் வழி கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளார்.
மேலும், இந்த கலந்துரையாடலில் கலாநிதி சாந்த தேவராஜன், கலாநிதி ரொஷான் பெரேரா, கலாநிதி அனிலா டயஸ் பண்டாரநாயக்க, கலாநிதி நிஷான் டி மெல் மற்றும் கலாநிதி ராம் மாணிக்கலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாலை 5 மணி முதல் 7 மணி வரை கூட்டம் நடைபெற்றது.