ஜப்பான் செல்கிறார் போரிஸ் ஜான்சான்.
இங்கிலாந்தில் ல் 2020ல் கொரோனா முதல் அலையின் போது கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 2020 மே மாதம், லண்டனின் 10, டவுனிங் தெருவில் உள்ள பிரதமரின் அலுவலக இல்லத்தில் போரிஸ் ஜான்சன் நடத்திய மது விருந்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கு கண்டனம் எழுந்ததால், தவறுக்கு போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கோரினார்.
இந்தநிலையில் போரிஸ் ஜான்சான் அடுத்த மாதம் ஜப்பான் செல்ல இருப்பதாக அறிவித்துள்ளார். அங்கு அவர் அந்த நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடாவை நேரில் சந்தித்து கொரோனா தொற்றை கையாள்வது உள்பட பல்வேறு விவகாரங்களில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.