சர்வதேச கிரிக்கெட்டில் பிரெண்டன் டெய்லருக்கு மூன்றரை ஆண்டு தடை. ஐசிசி அதிரடி முடிவு
ஜிம்பாப்வே அணியை சேர்ந்த பிரன்டன் டெய்லர் ஊழல் எதிர்ப்பு பரிசோதனையில் தற்பொழுது சிக்கியுள்ளார். ஐசிசி தலைமையிலான ஊழல் எதிர்ப்பு பரிசோதனையில் தற்போது அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. ஐசிசி இது சம்பந்தமாக விசாரணை செய்ததன் அடிப்படையில், அவர் மீது நான்கு குற்றச்சாட்டுகளை அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி போதைப்பொருள் சம்பந்தமாக தனியாக ஒரு குற்றச்சாட்டும் அவர் மீது தற்போது எழுந்துள்ளது.
2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய தொழிலதிபர் அழைப்பை ஏற்று பிரன்டன் டெய்லர் டெல்லிக்கு வந்து இருக்கிறார். அவருக்கு சுமாராக 15,000 டாலர்கள் ரொம்ப பணமாகவும் அதுமட்டுமின்றி ஒரு கைப்பேசி அவருக்கு பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு விஷயங்கள் அவருக்கு வழங்கப்பட்டு இருக்கலாம் என்றும் தற்போது தெரியவந்துள்ளது.
எதனடிப்படையில் இவருக்கு இவ்வளவு பொருட்களை இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் கொடுத்துள்ளார் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ஐசிசி தரப்பில் இது சம்பந்தமாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, “அனைத்து பொருட்களையும் நான் வாங்கிக் கொண்டது உண்மைதான் ஆனால் ஏமாற்றம் விதத்தில் அல்லது எந்தவித குற்றத்தை செய்யும் அடிப்படையில் தான் அந்த அனைத்து பொருட்களையும் பெறவில்லை” என்றும் கூறியுள்ளார்.
மிக முக்கியமாக ஊக்கமருந்து பரிசோதனையில், போதைப்பொருள் எடுத்துக் கொண்டதாகத் தெரிய வந்துள்ளது. இவை அனைத்தையும் பிரண்டன் டெய்லரால் நிரூபிக்க முடியாத சூழ்நிலை காரணமாக ஐசிசியின் ஊழல் மற்றும் போதை எதிர்ப்பு பிரிவு அவரை கிரிக்கெட் விளையாட மூன்றரை ஆண்டுகாலம் தடை விதித்துள்ளது.
35 வயதாகும் அவர் இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2320 ரன்கள், 205 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6685 ரன்கள், 174 டி20 போட்டிகளில் விளையாடி 3911 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடதக்கது.