நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழந்த இளம் தமிழ் யுவதிகள் விபரம் வெளியானது.

உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்றவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
அட்டம்பிட்டிய பகுதியை சேர்ந்த 20 வயதான சஷிபிரியா, 21 வயதான திரிஷா 19 வயதான டேவிட் சஞ்சு ஹற்றன் பகுதியை சேர்ந்த 24 வயதான பவானி, 23 வயதான டேவிட் குமார் என்பவர்களே உயிரிழந்துள்ளனர்.
11 பேர் நீராட சென்றுள்ளதுடன் அவர்களில் 5 பேர் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்தனர்.
மீட்பு படையினரின் தீவிர தேடுதலை அடுத்து ஐந்து பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.