அனுர மீது முட்டை தாக்குதல்! அநுரவுக்கு முட்டை வீச வந்த இருவரும் அனைத்தையும் கக்கினர்
கம்பஹாவில் இன்று (30) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் (NPP) கம்பஹா மாவட்ட மாநாட்டிற்கு வருகை தந்த அநுரகுமார திசாநாயக்கவுக்கு முட்டை தாக்குதல் நடத்த வந்த இருவர், அங்கிருந்தவர்களால் கைது செய்யப்பட்டு நிட்டம்புவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. முட்டை தாக்குதலின் அனைத்து விவரங்களையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
பலம் வாய்ந்த அமைச்சர் மற்றும் பிரதேசத்தில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் பெயர்களை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இத் தாக்குதலுக்காக ஆளுக்கு ரூ.5000 வீதம் வழங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இதற்கு முன்பு JVP கொழும்பில் நடத்திய கூட்டத்திலும் தாமே முட்டை தாக்குதலை நடத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், முட்டை தாக்குதலை நடத்துவதற்கான சதித்திட்டம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.