இலஞ்சம் பெற்ற பாடசாலையின் அதிபருக்கு விளக்கமறியல்…
இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாணந்துரை பிரதேச பிரபல பாடசாலை அதிபர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி ,குறித்த அதிபர் பெண் ஒருவரிடம் 1 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொள்வதற்கு முயற்சித்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தரம் ஒன்றில் மாணவர் ஒருவரை சேர்த்துக் கொள்வதற்காக இவர் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைகுழு மேற்கொண்ட நடவடிக்கையில் இவர் கைது செய்யப்பட்டார்.