பிரபல தமிழ் பெண் செய்தி வாசிப்பாளர் மீது பல பிரிவுகளின் கீழ் பொலிசார் வழக்குப்பதிவு! கைதாவாரா?

பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும், பாஜக கட்சியின் செயற்குழு உறுப்பினருமான சவுதா மணி மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து அவர் கைதாவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரபல தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் சவுதா மணி. இவர் கடந்த 2017ல் பா.ஜ.க கட்சியில் இணைந்த நிலையில் கட்சியின் செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டதாக சவுதா மணி மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதம் தொடர்பில் நபர் ஒருவர் சர்ச்சையான வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவை தனது சமூகவலைதள பக்கத்தில் பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதா மணி பதிவிட்டு “தைரியமா? விடியலுக்கா?” என கேள்வி எழுப்பி திமுக அரசை சாடி இருந்தார்.
இதுதொடர்பாக சவுதா மணி மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு – சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சவுதா மணி மீது கலகம் செய்ய தூண்டுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்தவொரு நபரையும் கலகம் செய்யத் தூண்டுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.