கொரோனா தொற்றால் பாடசாலை மாணவி உயிரிழப்பு!

புத்தளம் – நாத்தாண்டியவில் உள்ள தேசிய பாடசாலையொன்றில் தரம் 6இல் கல்வி கற்றுவந்த மாணவி ஒருவர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இவ்வாறு உயிரிழந்தவர் தப்போவ பகுதியைச் சேர்ந்த 11 வயதான மாணவியொருவராவார்.
சுமார் இரண்டு நாட்கள் மாரவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கமைய, அவருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.