நாடளாவிய ரீதியில் 2,438 பரீட்சை மத்திய நிலையங்கள்…
2021 க்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள கொரோனா தொற்றுடைய பரீட்சார்த்திகளுக்காக, வைத்தியசாலைகளில் 29 விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
இதன்படி ,உயர்தர பரீட்சை பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,438 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளது.
பாடசாலை மற்றும் தனிப்பட்ட ரீதியில் 3 இலட்சத்து 45 ஆயிரத்து 242 பேர் இம்முறை பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.
மேலும் ,316 இணைப்பு மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்காக இரண்டு விசேட அறைகள் வீதம் ஒவ்வொரு பரீட்சை மத்திய நிலையத்திலும் அமைக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.