கென்யாவில் வெடிகுண்டு தாக்குதல்- 10 பேர் பலி.
வடகிழக்கு கென்யாவில் இன்று காலை நெடுஞ்சாலையில் வெடிகுண்டு சாதனம் மீது வாகனம் சென்றதில் குறைந்தது 10 பேர் இறந்தனர்.பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என கூறப்படுகிறது.
வடகிழக்கு பிராந்திய தளபதி ஜார்ஜ் சேடா கூறுகையில், மண்டேரா நகருக்கு வெளியே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.வாகனத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது தெரியவில்லை.மற்றவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றார்.
கென்யாவிற்கு அருகில் உள்ள சோமாலியாவில் இருந்து எல்லை கடந்து செயல்படும், அல்-ஷபாப் தீவிரவாதிகளால் அப்பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களை குறிவைத்து இத்தகைய தாக்குதல்கள் தீவிரவாதிகளால் அடிக்கடி நடத்தபடுகிறது.
இந்த குண்டுவெடிப்பு குறித்த போலிஸ் அறிக்கையில் தாக்குதல் நடத்தியவர்கள் அதன் பின் எல்லையை நோக்கி தப்பிச் சென்றதாகக் கூறியுப்பட்டுள்ளது.