கொடியுடன் கூடிய அணியின் லோகோவை வெளியிட்ட லக்னோ அணி.
இந்தியாவில் நடைபெற இருக்கும் 15-வது ஐபிஎல் தொடரானது மார்ச் மாதம் இறுதியில் துவங்க உள்ளது. இந்த 15 வது சீசனில் பங்கேற்கும் 10 அணிகளும் தற்போது தங்கள் அணியில் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டு விட்டன. குறிப்பாக இந்த தொடருக்காக புதிதாக இணைந்த லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகளும் தங்கள் அணியில் தக்கவைத்த 3 வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.
அதன்படி சஞ்சீவ் கோயங்கா உரிமையாளரான லக்னோ அணியின் கேப்டனாக கே.எல் ராகுலும், ஆல்-ரவுண்டராக மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் ஸ்பின் பவுலராக ரவி பிஷ்னோய் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளது. அதேபோன்று அந்த அணியின் பெயரையும் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் என்றும் அணியின் பெயரையும் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த தொடரில் கலந்து கொள்ளும் இந்த புதிய லக்னோ அணியானது தங்களது அணியின் லோகோவை இன்று மாலை தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்டது.
Here’s the story behind our identity. ?#LucknowSuperGiants #IPL pic.twitter.com/4qyuFeNgsR
— Lucknow Super Giants (@LucknowIPL) January 31, 2022
அவர்கள் பகிர்ந்த இந்த புகைப்படமானது வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே இணையத்தில் வைரலாகியுள்ளது. அதன்படி அவர்கள் வெளியிட்டுள்ள இந்த லோகோவில் முக்கியத்துவம் வாய்ந்த கருடனை அடிப்படையாகக் கொண்டு இந்திய தேசிய கொடியின் மூவர்ண நிறங்களையும் கொண்டு அந்த கருடப் பறவை அமைக்கப்பட்டுள்ளது.
அதோடு அணியின் பெயரையும் சேர்த்து இடையில் ஒரு கிரிக்கெட் பேட் இடம்பெற்றுள்ளது போன்ற அமைப்புடன் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.