பாராளுமன்றத்தில் 25 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி…

பாராளுமன்றத்தில் 25 ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி ,கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட இந்த குழுவில் 5 பாராளுமன்ற காவல் அதிகாரிகளும் உள்ளனர்.

கொவிட் தொற்றுக்குள்ளான ஊழியர்கள் தனிமைப்படுத்தலுக்கும் அவசர சிகிச்சைக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார்.

152 பாராளுமன்ற ஊழியர்களிடம் நேற்று முன்னெடுக்கப்பட்ட விரைவான ஆன்டிஜென் பரிசோதனையில‍ேயே, 25 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

சபாநாயகர் உட்பட 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட பாராளுமன்ற அதிகாரியொருவர் அண்மைய நாட்களில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டனர்.

இதன்படி 46 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதேவேளை, எதிர்வரும் 3ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் மீண்டும் ஒரு விரைவான ஆன்டிஜென் சோதனை நடத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.