தி.மோர்-லெஸ்தே நாட்டில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம்…

திமோர்-லெஸ்தே நாட்டின் திலி நகரில் இன்று அதிகாலை 12.55 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 6.0 ஆக பதிவாகி உள்ளது.
இந்நிலநடுக்கம் 140 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.