இந்தோனேசியாவில் இன்று காலை ரிக்டர் 6.2 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மாலூக்கு மாகாணத்தில் இன்று அதிகாலை 4.25 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 131 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருந்ததாகவும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா தீவில் கடந்த மாதம்தான் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.