கல்முனையில் ஒரு இலட்சம் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு!
வரவு செலவுத் திட்டத்தில் ஒரு இலட்சம் வேலைத்திட்டம்’ எனும் தொனிப்பொருளிலான பாரிய அபிவிருத்தித் திட்டம் இன்று நாடு முழுவதும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலக பிரிவில் ஒரு இலட்சம் பணிகள் வேலைத்திட்டம் கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில்(தேசிய பாடசாலை) நடைபெற்றது.
இதன் போது பாடசாலைக்கு மலசல கூட புனரமைப்புக்கு மூன்று இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கல்முனை-3 கிராம சேவகர் பிரிவில் பிரிவுக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். ஐ. எம் .ஜிப்ரி தலைமையில் இன்று (03) இடம் பெற்றது .
கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம். எம்.ஜெளபர் , அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. எல். ஏ.நஜிபர் ஆகியோர் கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக பாடசாலைக்கு மலசல கூட புனரமைப்புக்கு மூன்று இலட்சம் பெறுமதியான உபகரணங்களை பாடசாலை அதிபர். எம். எஸ். எம் பைசால் அவர்களிடம் கையளித்தனர்.
மேலும் இதன் போது,பாடசாலை உதவி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.