சுதந்திரக் கிண்ண உதைப்பந்தாட்ட மாகாண லீக் போட்டிகள்.
சுதந்திரக் கிண்ண உதைப்பந்தாட்ட மாகாண லீக் போட்டிகள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில்….
சுதந்திரக் கிண்ண உதைப்பந்தாட்ட சிலோன் மாகாண லீக் போட்டிகள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில்; பெப்ரவரி 2ஆந் திகதி; ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் அவர்களின் தலைமையில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷவின் ஏற்பாட்டிலும் இடம்பெற்ற இன் நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சினால் நாட்டின் விளையாட்டுத் துறையினை மேம்படுத்தும் நோக்குடன் எதிர்வரும் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 பெரும் விளையாட்டு போட்டிகளை 2023 ஆம் ஆண்டுவரை நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் நாட்டின் தேசிய உதைப்பந்தாட்ட அணியினைத் தெரிவு செய்யும் நோக்குடன் 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் அடங்கிய 8 அணிகள் கொண்ட சிலோன் மாகாண லீக் போட்டிகள் நாடுபூரகவும் இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைவாக தென் மற்றும் வட மாகாணங்களுக் கிடையிலான போட்டி பெப்ரவரி 2ஆந் திகதி பி.ப. 3.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பில் வெபர் மைதானத்தில் இடம்பெற்ற இன் நிகழ்வில் அரசாங்க அதிபர் கே. கருணாகரன், முன்னால் அரசாங்க அதிபரும் மட்டக்களப்பு மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் உதயகுமார், பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவரும் சிவனேசதுறை சந்திரகாந்தன், அரசின் உயர் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் உட்பட உதைப்பந்தாட்ட வீரர்கள் மற்றும் ரசிகர்களும் கலந்துகொண்டனர்.