சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு அதிக பொலிசார் கடமைகளில்…….
மூவாயிரத்திற்கும் அதிகமான பொலிஸார் கடமைகளில்!!
சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு பாதுகாப்பு கடமைகளில் மூவாயிரத்திற்கும் அதிகமான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி ,விசேட நடவடிக்கைக்கான செயலணி மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டு பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமகாலத்தில் கொழும்பு நகர் உள்ளிட்ட மேல் மாகாணத்தை உள்ளடக்கும் வகையில் விசேட பாதுகாப்பு செயற் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்துடன் 21 வீதிகள் போக்குவரத்திற்காக மட்டுப்படுத்தப்படும் என்றும் அதற்கான செயற்திட்டமானது மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்படும் என்றும் மாற்றுப் பாதைகளை உபயோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ,இலங்கை கடற்படையினரால் தாய் நாட்டிற்காக கஜபாகு கப்பலிலிருந்து 25 பீரங்கி வேட்டுக்கள் காலி முகத்திடலில் வைத்து தீர்க்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.