போட்டியிட வயசு இன்னும் வரல… 19 வயது விஜய் ரசிகர் வேட்புமனு நிராகரிப்பு…

தஞ்சாவூரில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர் மனு நிராகரிப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் போட்டியிட 443 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து வேட்புமனுக்கள் மீது பரிசீலனை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 13 வது வார்டில் விஜய் மக்கள் மன்றம் சார்பில் 19 வயது நிரம்பிய பரணி என்பவர் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் நகர்புறத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும், இதனால் வயதின் காரணமாக பரணியின் வேட்புமனுவை அதிகாரிகள் நிராகரிக்கத்தனர்.