அரசியல்வாதிகளின் விருப்பத்துக்கிணங்க சிறைக் கைதிகளை விடுவிக்கவே முடியாது ரஞ்சன் விவகாரம் தொடர்பில் மஹிந்த கருத்து.
“அரசியல்வாதிகளின் தேவைக்கேற்ப சிறைத்தண்டனை அனுபவித்துவரும் கைதிகளை விடுவிக்க முடியாது. அதற்கான நடைமுறைகள் உள்ளன.”
இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இலங்கையின் 74ஆவது சுதந்திர தினத்தன்று ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்படாமை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“ரஞ்சன் ராமநாயக்க பலருக்கு நல்லவராக இருக்கலாம். ஆனால், அவர் இழைத்த குற்றத்துக்காகச் சட்டம் அவரைத் தண்டித்துள்ளது. சஜித் அணியினரின் விருப்பத்துக்கிணங்க அவரைப் பொதுமன்னிப்பில் விடுவிக்க முடியாது. அதற்கான நடைமுறைகள் உள்ளன” – என்றார்.