நீட் தேர்வில் வென்று டெல்லி எய்ம்ஸ்-ல் சேர்க்கை பெற்ற அசாம் தேநீர் வியாபாரி

தேநீர் வியாபாரம் செய்து கொண்டே படிப்பது என்பது ஒரு நிச்சயம் ஒரு கடினமான இலக்காகத்தான் இருக்கும். தனது தாய் நடத்தி வந்த தேநீர் கடையில் தேநீர் வியாபாரம் செய்து கொண்டே படித்து, நீட் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார் ராகுல் தாஜ் என்ற இளைஞர்.

24 வயதாகும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தேநீர் வியாபாரியான இளைஞரின் கடினமான உழைப்பின் மூலம், நீட் தேர்வை முதல் முயற்சியிலேயே வென்று, தில்லி எய்ம்ஸ் கல்லூரியில் மருத்துவ மாணவர் சேர்க்கைப் பெற்றுள்ளார்.

ஆனால், இந்தப் பயணம் அவ்வளவு ஒன்றும் எளிதாக இருந்துவிடவில்லை. சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு, தனது தாய், மற்றும் சகோதரனுடன் தன்னை தவிக்கவிட்டு காணாமல் போன தந்தையால், தாயே குடும்பச் சுமையை சுமக்கும் நிலை ஏற்பட்டது.

ராகுல் தாஸின் மருத்துவர் கனவு, குடும்ப வறுமை காரணமாக, பள்ளிப் படிப்பை 12ஆம் வகுப்புடன் நிறுத்தியதோடு தகர்ந்து போனது. ஆனால், விட்டுவிடவில்லை ராகுல் தாஸ், தேநீர் வியாபாரம் செய்து கொண்டே தன்னால் படிக்க முடியும் என்று நினைத்தார்.

பள்ளியிலிருந்து தேநீர் கடைக்கு வந்ததும், தனது தாய்க்கு உதவியாக இருப்பேன். அவருக்கு வேறு யாரும் உதவ இல்லை. தேநீர் போடுவேன், தேநீர் கொடுப்பேன். அப்போது கிடைக்கும் இடைவேளையில், உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பேன் என்கிறார்.

2015ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பை முடித்த ராகுல் தாஸ், மேற்கொண்டு படிக்க பணம் வேண்டும் என்பதால் படிப்பை நிறுத்திவிட்டார். பிறகு, டிப்ளமோ படிப்பில் சேர்ந்து படிப்பை முடித்தார். பிறகு, 2020ல் பெரிய நிறுவனம் ஒன்றில் ராகுல் ராஸுக்கு வேலை கிடைத்தது. கைநிறைய சம்பளம் கிடைத்தும் திருப்தி அடையவில்லை. தனது டாக்டர் கனவு அவரை தூங்கவிடாமல் செய்தது.

இதனால், வேலையை விட்டுவிட்டு, நீட் தேர்வுக்கு படிக்க முயன்றேன். புத்தகம் வாங்கவோ சிறப்பு பயிற்சி எடுக்கவோ பணமில்லை. ஆன்லைனில் கிடைத்த தகவல்களைக் கொண்டு பயிற்சி எடுத்தேன். கடையில் ஆளிருக்கும் போது தேநீர் வியாபரம் செய்வேன். ஆள் இல்லாதபோது படிப்பேன்.

அவர் தேசிய அளவில் தரவரிசையில் 12,068வது இடத்தையே பிடித்தாலும், எஸ்சி பிரிவின் கீழும், கையில் ஏற்பட்ட காயத்தால் மாற்றுத்திறனாளி சான்றிதழ் போன்றவை தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

எனது அம்மா தேநீர் கடை வைத்திருக்கும் இடத்தை ஒருவர் வாடகை இல்லாமல் கொடுத்து உதவினார். அவர் தான் இன்று எனக்கு தில்லி செல்ல டிக்கெட் எடுத்துக் கொடுத்துள்ளார். மாவட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவரும் உதவி செய்து வருகிறார். என்னைப் பற்றி செய்தி அறிந்துஅசாம் அமைச்சர் ரஞ்ஜீத் குமார் எங்களது கடைக்கு வந்து என்னிடம் ரூ.10 ஆயிரம் கொடுத்துச் சென்றார். எங்களுக்கு உதவும் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார்.

இந்த நிலையில்தான், அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ராகுல் தாஸின் அனைத்து கல்விச் செலவையும் மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் என்று உறுதியளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.