ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கி தவித்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!
மொராக்கோ நாட்டில் 4 நாட்களாக கிணற்றில் சிக்கிய சிறுவன் மீட்பு பணியின் முடிவில் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொராக்கோவில் 100 அடி கிணற்றுக்குள் விழுந்த 5 வயது சிறுவனை காப்பாற்ற கிட்டத்தட்ட 4 நாட்களாக மீட்புக்குழுவினர் போராடி வந்த நிலையில்,மீட்பு பணியின் முடிவில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
ஆப்பிரிக்கா நாடான மொராக்கோவில் Chefchaouen மாநிலத்தில் 5 வயது சிறுவன் கடத்த செவ்வாக்கிழமை மாலை நேரத்தில் 100 அடி (30 மீட்டர்) ஆழமுள்ள ஒரு ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.
குழந்தை அழும் குரல் கேட்டதையடுத்து, கிணற்றுக்குள் சிறுவன் விழுந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மொராக்கோ மீட்புக் குழுவினர் புதன், வியாழன் என 48 மணிநேரங்களுக்கும் மேலாக சிறுவனை செங்குத்தாக மீட்க முயற்சித்தனர்.
கிணறு 32 மீட்டர் ஆழம் கொண்டது மற்றும் மேலே 45cm (18 அங்குலம்) விட்டத்தில் இருக்கும் அந்த கிணறு கீழே இறங்க இறங்க சுருங்கியுள்ளதாகவும், அதன் காரணமாக குழந்தையை மீட்க மீட்பவர்கள் கீழே செல்ல முடியாது என மீட்புக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.
அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால், நேற்று கிணற்றின் பக்கவாட்டில் பிரம்மாண்ட இயந்திரங்களைக் கொண்டு, நேராக சிறுவன் இருக்கும் தூரம் வரை பாரிய பள்ளத்தை தோண்டி வந்தனர். அந்த நிலையில், பக்கவாட்டில் கிணறு தோன்றும் திட்டத்தின்படி, கிட்டத்தட்ட சிறுவனை நெருங்கி சென்றிருந்தனர்.
கிணற்றின் வாய் பகுதி ஒன்றரை அடி விட்டமே கொண்டிருந்தமை மீட்பு பணியில் சிரமத்தை ஏற்படுத்தியிருந்ததுடன், அதிகாரிகள் இயந்திரங்களை கொண்டு மீட்பு பணியை தொடர்ந்திருந்தனர்.
இதனை தொடர்ந்து சிறுவனுக்கு கயிறு வழியே உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டதுடன், கடந்த 4 நாட்களாக நடந்த மீட்பு பணியின் முடிவில் சிறுவனை வெளியே கொண்டு வந்திருந்தனர்.
எனினும், குறித்த சிறுவன் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.