ஆபாச வீடியோ காட்டி கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய பிரபல டாக்டர் – ஆன்லைன் புகாரில் கைது..!!
மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட எலும்பு முறிவு டாக்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 17 வயது மாணவி திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் படிப்பு படித்து வருகிறார். இவரது தாய் காரைக்குடியில் துணிக்கடை வைத்துள்ளார். தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சிறுமியின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாத போது காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையான பி.கே.என். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது வழக்கம். மருத்துவமனை டாக்டர் மோகன்குமாருக்கும், சிறுமியின் தாயாருக்கும் இந்த தொடர்பு மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சிறுமியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததை காரணம் சொல்லி டாக்டர் மோகன்குமார் அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார். மேலும் இரவு வரை மாணவியின் தாயின் அறையில் தங்கியிருந்துள்ளார். தாய் நடவடிக்கை குறித்து மாணவி, தந்தைக்கு புகார் அளித்துள்ளார். தந்தையும், மனைவியை கண்டித்துள்ளார். மாணவி கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும்போது மாணவியை டாக்டர் மோகன்குமார் காரில் அழைத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அப்போது, மாணவியின் தோளில் கை போட்டுக் கொண்டு அவரது அம்மாவுடன் நெருக்கமாக இருந்த போட்டோவை காண்பித்து, நீயும் என்னுடன் இதே போல நெருக்கமாக இரு என கூறியுள்ளார். சிறுமி மறுக்கவே அவரை அடித்துள்ளார். கொரானா காலத்தில் மாணவி ஆன்லைனில் வீட்டில் படித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த டாக்டர், பயாலஜி சொல்லித் தருகிறேன் என கூறி அருகில் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு, யூ டியூப்பில் ஆபாச வீடியோவை காண்பித்து இது போல தான் பாடத்தில் வரும் என தொடர்ந்து டார்ச்சர் செய்துள்ளார்.
2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாணவி அவரது தம்பி, தங்கையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது டாக்டர் மோகன்குமார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என மாணவி ஆன்லைனில் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். காரைக்குடி டி.எஸ்.பி காரைக்குடி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயமணி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து எலும்பு முறிவு ஸ்பெஷலிஸ்ட் டாக்டரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்..