எண்ணெய் தாங்கி குறித்த ஒப்பந்தம் பாராளுமன்றில் முன்வைப்பு.
திருகோணமலை எண்ணெய் தாங்கி அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தம் இன்று (8) பாராளுமன்றில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை அபிவிருத்தி செய்வதற்காக காணி ஆணையாளர் நாயகம், திறைசேரியின் செயலாளர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐஓசி மற்றும் Trinco Petroleum Terminal தனியார் நிறுவனம் ஆகியன குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.
அதற்கமைய , 99 எண்ணெய் தாங்கிகளில் 85 எண்ணெய் தாங்கிகள் இலங்கைக்கும் ஏனைய 14 எண்ணெய் தாங்கிகள் இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இதனையடுத்து, ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.