வெளிநாட்டுப் பொதிகளில் பெருந்தொகை போதைப் பொருள் மீட்பு…..

அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு அனுப்பப்பட்ட ஐந்து பொதிகளில் “குஷ்” மற்றும் கொக்கெய்ன் ஆகிய போதைப்பொருள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தகவல்களை மத்திய தபால் பரிவர்த்தனை நிலையம் நேற்று (08) வெளிப்படுத்தியுள்ளது. அந்த பொதிகளில் 1,073 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் இருந்ததாக, மத்திய அஞ்சல் பரிவர்த்தனை அதிகாரி தெரிவித்துள்ளார்.

2020 ம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய அஞ்சல் பரிவர்த்தனைக்கு அனுப்பப்பட்ட பொதிகளைப் பெறுவதற்கு குறித்த முகவரிகளுடன் கூடிய நபர்கள் வராததால், நேற்று (08) பொதிகளைத் திறந்து பார்த்தபோது, ​​போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த பொதிகள் கடுவெல, மாலபே மற்றும் கொழும்பு முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட போதைப் பொருட்களில் சுமார் 150,000 ரூபா பெறுமதியான கொக்கெய்ன் மற்றும் 10 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான ‘குஷ்’ என்ற போதைப்பொருள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க சுங்க போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.