Loan App மோசடி.. அந்தரங்க மிரட்டலுக்கு ஆளாகும் இளைஞர்கள் – கதறும் மக்கள்
வங்கி மோசடி, ஏடிஎம் கார்ட் மோசடி என்று பல மோசடிகளைத்தாண்டி, இப்போது லோன் ஆப் மோசடி ஒன்று புதிதாக அரங்கேற்றப்பட்டுவருகிறது. ஆப் மோசடி நடைபெறுவது எப்படி?
அவசர தேவையா , உடனே பணம் வேண்டும் ஓரு போன் இருந்தால் போதும் உடனே பணம்! இது தான் நமது மொபைல் போன்களுக்கு வரும் விளம்பரம் . உடனடி லோன் என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்துடன் பல லோன் ஆப்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஈசியான முறையில் பணம் பெறாலாம் என அதை நம்பி குறிப்பிட்ட சில ஆப்பை பலர் பதிவிறக்கம் செய்கின்றனர். பதிவு செய்யும்போது, ஆதார் அட்டை நகலை கேட்கும், செயல்படுவதற்கு சில அனுமதிகளை கேட்கும், அவற்றிற்கு அனுமதி கொடுத்தால் போதும், உடனே கடன் தொகை உங்களது வங்கி கணக்கிற்கு வந்துவிடும்.
ஆனால் பார்க்க ஈசியென நினைத்தால், இதில் தான் அதிக ஆபத்து இருக்கின்றது என்கின்றனர் இந்த லோன் ஆப் மூலமாக பணம் பெற்று துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள். நாம் கேட்கும் தொகையில் பாதி தொகையை வட்டியாக எடுத்துக்கொண்டு மீதி தொகையை மட்டும் கொடுக்கும் இந்த லோன் ஆப் நிறுவனங்கள் பெற்ற தொகையை இரட்டிப்பாக ஒரு வாரத்திற்குள் கட்ட வேண்டும் நிர்பந்திக்கின்றனர்.
கடனாக பெற்ற தொகையை இரட்டிப்பாக கட்ட தவரும் பட்சத்தில் கடன் பெற்றவர்களுக்கு ஆபாச மிரட்டல் கொடுக்க தொடங்குகின்றன ஆந்த லோன் ஆப் நிறுவனங்கள். இதற்கும் மேலாக லோன் பெற்றவரின் செல்போனில் அவர்களின் நண்பர்கள் பெற்றோர் உறவினர்கள் செல்போன் எண்களை திருடும் இந்த லோன் நிறுவனங்கள் அவர்களுக்கும் ஆபாச புகைப்படங்களை சித்தரித்து அனுப்புகின்றனர்.
கடன் செயலி மோசடி குறித்து போலீசாரிடம், புகார் கொடுக்கப்பட்டாலும், குற்றவாளிகளை கைது செய்வதில் நடைமுறை சிக்கல் இருப்பதாக கூறுகிறார்கள் வல்லுநர்கள். அவசர பணத்தேவைகள் அனைவருக்கும் ஏற்படுவது இயல்பு தான் ஆனால் நமது தேவை அறிந்தே இது போன்ற மோசடி செயலிகளும் மோசடிகளில் ஈடுபடுகின்றன. பதிவு பெற்ற நிறுவனம் அல்லது வங்கியில் கடன் பெறுவதுடன், போலி செயலி குறித்து விழிப்புணர்வு பெறுவது மட்டுமே, இந்த மோசடியில் சிக்காமல் இருக்க வழி என்கிறார்கள் போலீசார்.