முகக் கவசம் கொள்வனவு செய்ய இலங்கை மக்கள் செலவிட்ட தொகை?
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளின் காரணமாக இலங்கை மக்கள் இரண்டாண்டு காலப் பகுதியில் பெருந் தொகை பணத்தை முகக் கவசம் கொள்வனவு செய்ய செலவிட்டுள்ளனர். கடந்த இரண்டாண்டு காலப் பகுதியில் முகக் கவசங்களை கொள்வனவு செய்வதற்காக சுமார் 18000 கோடி ரூபா பணத்தை செலவிட்டுள்ளனர்.
நுகர்வோர் விவகார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் இந்த தகவலை நாளிதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இதன்படி, நாள் ஒன்றுக்கு முகக் கவசம் கொள்வனவு செய்வதற்காக 25 கோடி ரூபாவினை மக்கள் செலவிடுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் பெருந்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் நாளாந்தம் முகக் கவசம் கொள்வனவு செய்ய நேரிட்டுள்ளது. எனவே முகக் கவசங்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதன் மூலம் மக்களின் சுமையை குறைக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.