மன்னாரில் முன்பள்ளி ஆசிரியர்களின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.
மன்னார் மாவட்டத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மற்றும் நிரந்தர நியமனங்கள் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று(9) காலை 9 மணி அளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் முன்பு நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் நான்கு பல பகுதிகளிலும் இருந்து வருகை தந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்
மன்னார் மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் துறை சார்ந்த தகைமைகளை நிறைவுசெய்துள்ளார்கள் கடந்த இரண்டு மூன்று வருடங்களுக்கு மேலாக தங்களது சம்பள உயர்வு மற்றும் நிரந்தர நியமனங்கள் கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு அதே போன்று வடக்கு மாகாண ஆளுநரிடமும் கோரிக்கைகளை முன்வைத்த போதும் இதுவரை அவர்களுக்கான எந்த ஒரு முன்னேற்றகரமான அல்லது நம்பகரமான பதில்கள் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது
தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக குடும்பச் செலவுகள் அதிகரிக்கும் இந்த நேரத்தில் தற்போது வழங்கப்படும் கொடுப்பனவு போதாது எனவே முன்பள்ளி ஆசிரியர்களாக கடமையாற்றும் எமக்கு நிரந்தர நியமனங்கள் வழங்குவதோடு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் அதுவரையில் முன்பள்ளிகளில் கடமையாற்ற போவதில்லை என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்காக மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் அவர்களிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது