பெரும் போகத்தில் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்.
இம்முறை பெரும் போகத்தில் 300,000 மெற்றிக் டொன் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
பெரும் போகத்தின் அறுவடையுடன் விவசாய சமூகத்தையும் நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையில் பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் உப தலைவர் டபிள்யூ.எச்.துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.
நெல் சந்தைப்படுத்தல் சபை போட்டி விலையில் நெல்லை பெற்றுக்கொள்வதால் அறுவடையை நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் ஒப்படைக்குமாறு நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிரதித் தலைவர் டபிள்யூ.எச்.துமிந்த பிரியதர்ஷன விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.