நியூசிலாந்தில் தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேர் கைது.
கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்றே வழி என பல நாடுகள் கருதுகின்றன. இதனால் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என வற்புறுத்தி வருகின்றன.
இதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவர்கள் கட்டாய தடுப்பூசி என்பது தனிமனித சுதந்திரத்தை பாதிக்கிறது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நியூசிலாந்தில் கட்டாயம் தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி டிரைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், நியூசிலாந்தின் பாராளுமன்ற வளாகத்தில் தடைகளை மீறி பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் போராட்டக்காரர்கள் 120 பேரை போலீசார் கைது செய்தனர்.