சதொச நிறுவன தலைவர் பணி நீக்கம்….

சதொச நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சிலர் பணி இடைநீக்கப்பட்டுள்ளனர். சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடாத்தும் நோக்கில் இவ்வாறு உயர் அதிகாரிகள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
வர்த்தக விவகார அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை அறிவித்துள்ளார். அண்மையில் மூன்றரை கோடி ரூபா மோசடி தொடர்பான குரல்பதிவுகள் வெளியாகியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பிலேயே சதொச நிறுவனத் தலைவர் உள்ளிட்டவர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 2019 முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இந்த மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.