யானை தாக்கி குடும்பஸ்தர் பரிதாப மரணம்!
காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகிக் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்தார்.
பொலனறுவை, அரலங்கவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஹல எல்லேவௌ பிரதேசத்தில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எல்லேவௌ பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயது நபரே உயிரிழந்தார்.
காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கான குறித்த நபர் உடனடியாக அரலங்கவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.