புதையல் தோண்டிய மூவர் வசமாக சிக்கினர்!

புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கண்டி, கல்னேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அவுக்கன பிரதேசத்தில் குறித்த மூவரும் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
இதன்போது புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்திய பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அவுக்கன, பெம்முல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 44, 43, 36 வயதுகளையுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.