இன்றுமுதல் அதிகரிக்கப்பட்டுள்ள சமுர்த்தி கொடுப்பனவுகள்.
நாடளாவிய ரீதியில் உள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கு இன்று முதல் 28% அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படும்.
அதன்படி ,2022 ஆம் ஆண்டு சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு 65,000 மில்லியன் ரூபாவை செலவிட அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
ரூ.3,500 பெற்றுக் கொண்டிருந்த குடும்ப அலகுக்கு ரூ.4,500 உதவித்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 1,500 ரூபாவைப் பெற்ற குடும்ப அலகுக்கு, 1,900 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.
மேலும் இதன்படி நாடளாவிய ரீதியில் சமுர்த்தி நன்மை பெறும் 1,767,000 குடும்பங்கள் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவை இன்று முதல் பெற்றுக்கொள்ளவுள்ளன.