தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் வீட்டிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் விஜயம்.
இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டிற்கு எம்பீக்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், தமிழர் முற்போக்குக் கூட்டணித் தலைவர் மனோ கனேஸன், காவிந்த ஜயவர்தன, கயந்த கருணாதிலக மற்றும் JVP யின் முன்னாள் எம்பி நளின் ஆகியோர் விஜயம் செய்தனர். நடந்த சம்பவத்தை நேரில் பார்வையிட்டு கேட்டறிந்து கொண்டனர்.
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டிற்கு இன்று (14) அதிகாலை 2 மணியளவில் வெள்ளை வேனில் வந்த ஆயுதம் தாங்கிய மூவர் பிலியந்தலையில் உள்ள சமுதிதவின் வீடு அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர் துப்பாக்கி முனையில் மிரட்டி வீட்டுக்குள் நுழைய முயன்றுள்ளனர்.
அதன் பின்னர் வீட்டின் மீது கற்களை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். பிலியந்தலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். என்பதும் குறிப்பிடத்தக்கது.