இலங்கை வருவாரா மோடி? அழைப்பு விடுத்தார் கோட்டா – உறுதிப்படுத்தினார் பீரிஸ்.
எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பிம்ஸ்டெக் அமைப்பில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய 7 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அந்தவகையில் அரச தலைவர்களுக்கு நாம் அழைப்பு விடுத்துள்ளோம். நான் கடந்த வாரம் இந்தியா சென்றபோது, பிரதமர் மோடிக்கான எமது ஜனாதிபதியின் அழைப்பை, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரிடம் கையளித்தேன்” – என்றார்.