மர்மமான முறையில் கூட்டம் கூட்டமாக இறந்துபோன பறவைகள்…

மெக்சிகோ நாட்டில் மர்மமான முறையில் பறவைகள் திடீரென இறந்து போன நிகழ்வு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இதன்படி ,சிவாஹூவா நகரின் தெருக்களில் கழுத்தில் மஞ்சள் நிறமும் மற்ற பாகங்களில் கருப்பு நிறமும் கொண்ட பறவைகள் கூட்டம் கூட்டமாக இறந்து கிடந்தன. திடீரென அவை கூட்டமாக கீழே விழுந்து இறந்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கனடாவில் இருந்து இனப்பெருக்கத்திற்காக இவை மெக்சிகோ வந்தபோது இவ்வாறு நிகழ்ந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எதனால் பறவைகள் இறந்தன என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.