யாழ்ப்பாண பல்கலைக்கழக வாயில்களை முடக்கிய மாணவர் குழு.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வாயில்களை முடக்கிய மாணவர் குழு ஒன்று இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாணவர் ஒருவரை பல்கலைக்கழக நிர்வாகம் அங்கீகரிக்க மறுப்பதாகத் தெரிவித்தே குறித்த நடவடிக்கை குறித்த மாணவர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
பல்கலைக்கழக பேரவையினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்பட்ட ஒருவரை மாணவர் ஒன்றியத் தலைவராக அங்கீகரிக்க முடியாது என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.