மின் கட்டணத்தை செலுத்தத் தவறியோருக்கான விஷேட அறிவிப்பு.

மின் கட்டணத்தை செலுத்தத் தவறிய வாடிக்கையாளர்களிடம் கட்டணத்தை வசூலிக்க அல்லது மின் இணைப்பை துண்டிக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு (PUC) தெரிவித்துள்ளது.
இது தொடர்பான உத்தரவு இன்று (17) பிறப்பிக்கப்படும் என அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.
தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.