‘மொட்டு’ கூட்டுக்குள் பெரும் குழப்பம்; புதிய அணிகள் உருவாகும் சாத்தியம்.
இலங்கை அரசியலில் முத்தரப்புக் கூட்டணிகளின் உருவாக்கங்களை விரைவில் காணமுடியும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரச கூட்டணிக்குள் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது. பங்காளிக் கட்சிகள், தமது அதிருப்தியை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றன.
அத்துடன் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவும் பதவி துறக்கத் தயாராகிவிட்டார்.
அண்மையில் அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மாநாட்டில் அரச பங்காளிக் கட்சிகள் பங்கேற்காமையானது, பங்காளிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள விரிசலைக் கோடிட்டுக் காட்டுகின்றது.
எனவே, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உடைவை விரைவில் எதிர்பார்க்க முடியும்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனிவழி செல்லக்கூடும் எனவும், ஏனைய கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை அமைக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.