நூறு கோடி மக்களின் எழுச்சி மட்டக்களப்பில் கொண்டாட்டம்.
பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் நிறுத்தப்படவேண்டும் எனும் தொனிப்பொருளில் நூறு கோடி மக்களின் எழுச்சி 2022 என்ற நிகழ்வு மட்டக்களப்பில் கொண்டாடப்பட்டது.
பெண்களுக்கு அவர்கள் உடல்மீதுள்ள உரிமைகளைக் கொண்டாடுவோம், பெண்கள் உடல்கள் மீது மற்றவர் உரிமை கொள்ளாத சமுகங்களைக் கொண்டாடுவோம். எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு நாவட்கடா பிரதேசத்தில் இயங்கிவரும் பெண்கள் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு பெப்ரவரி 14 அன்று நாவற்குடா ஜீவஒளி மைதானத்தில் இடம்பெற்றது.
மூன்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டுக்குழு, வன்முறையற்ற வாழ்வுக்கான காண்பியக் கலைஞர்கள், நீதிக்கான பறைசமதை பெண்ணிலைவாத நன்பிகள் குழு என்பன இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாது செய்திருந்தனர்.
இதன்போது பெப்ரவரி 14ல் வருடாந்தம் கொண்டாடப்படும் நூறுகோடி மக்களின் எழுச்சி நிகழ்வுகள், சிறுவர்களுக்கான ஓவியம் வரைதல் மற்றும் கண்காட்சி நிகழ்வுகள், செயல்வாதப் பாடல்கள், வன்முறையற்ற வாழ்விற்கான காண்பிக் காட்சிகள் மற்றும் நீதிக்கான பறை போன்ற நிகழ்வுகளும் நிகழ்த்தப்பட்டன.
இன்நிகிழ்ச்சியினைக் கண்டுகழிக்க பெரும்பாலான பெண்கள், சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் பிரசன்னமாயிருந்தனர்.