சஜித் – சம்பிக்கவை இணைக்க சிரேஷ்ட உறுப்பினர்கள் முயற்சி.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவையும், சம்பிக்க ரணவக்கவையும் நேரில் சந்திக்க வைத்து முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி கைக்கூடவில்லை என்று தெரியவருகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமிக்கும் திட்டத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, திடீரென ’43ஆம் படையணி’ எனும் அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார். குறித்த இயக்கத்தின் மாநாட்டையும் பெருமெடுப்பில் நடத்தியுள்ளார்.
2024இல் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்தே சம்பிக்க இவ்வாறு செயற்படுகின்றார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. சம்பிக்கவின் சில நகர்வுகளால் அவர் மீது சஜித்தும் கடும் அதிருப்தியில் இருக்கின்றார்.
மாநாட்டின் பின்னர் சம்பிக்கவை சஜித் வெளிப்படையாகவே விமர்சிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலை, தொடருமானால் எதிரணி பலவீனமடையும், இரண்டாக உடையும் என்பதால் இவ்விருவரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் இறங்கியுள்ளனர்.
எனினும், அந்த முயற்சி இன்னும் கைகூடவில்லை எனத் தெரியவருகின்றது.