விஜய் பற்றி பேசுவது மிக சுலபம் நான் சொல்லும் படங்களில் நடித்தால் சிறப்பாக இருக்கும்.

மலையாள சினிமாவில் ஹீரோயினாக நடித்து பின் தமிழ் பக்கம் வந்தவர் மாளவிகா மோகனன் இவர் ஒரு மாடல் அழகியும் கூட முதலில் தமிழில் ரஜினியின் பேட்டை படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். அதனை தொடர்ந்து தளபதி விஜயுடன் கைகோர்த்து மாஸ்டர் திரை படத்தில் அவருடன் ஜோடி போட்டு அசத்தி தருமாறாக அசுர வளர்ச்சியை எட்டியது.
அடுத்தபடியாக நடிப்புக்கு பெயர்போன தனுஷுடன் கைகோர்த்து மாறன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சினிமாவுலகில் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றி ஓடிக்கொண்டிருந்தாலும் நடிகை மாளவிகா மோகனன் நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதில் கெட்டிக்காரப் பெண்ணாக இருக்கிறார்.
இதனால் அவருக்கு ரசிகர்களும் அதிகமாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாறன் திரைப் படத்தை முடித்துவிட்டு ரசிகர்களுக்காக கடற்கரைப் பக்கம் ஒதுங்கி உள்ளார் மாளவிகா மோகனன். அதை வெளிப்படுத்தும் வகையில் தொடர்ந்து பிக்னிக் மற்றும் அரைகுறை உடையில் இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி அசத்துகிறார்.
இப்படி சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மாளவிகா மோகனன் ரசிகர்களுடன் சமீபத்தில் உரையாடியுள்ளார் அப்பொழுது ரசிகர்கள் விஜய்யை பற்றி சொல்லுங்கள் என கேட்டார் அதற்கு அவர் விஜய் பற்றி பேசுவது மிக சுலபம் என கூறியுள்ளார்.
ரசிகர்கள் கேட்டதற்காக விஜய் குறித்து மாளவிகா கூறியது. விஜய் சமீபகாலமாக ரொமான்டிக் படங்களில் நடிப்பதில்லை அவர் நடித்தால் சிறப்பாக இருக்கும் நானும் அவருடன் நடிக்க ஆசையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மாளவிகா மோகனன் ரசிகர்களிடம் இவ்வாறு பேசிய செய்தி தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு தீயாய் பரவி வருகிறது.