கனடா லாரி ஓட்டுநர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.
கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லாரி டிரைவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் மற்றும் அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் லாரி டிரைவர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என கனடா அரசு அறிவித்தது.
இதனிடையே, தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனடாவில் லாரி டிரைவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக கனடா – அமெரிக்காவை இணைக்கும் முக்கிய பாலமான தி அம்பாசிடர் பாலத்தை போராட்டக்காரர்கள் முடக்கினர். இதைஅடுத்து, அந்த மேம்பாலம் மூடப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது
அதன்பின்னர், அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் போராட்டக்காரர்களை சிறையில் அடைக்கவும் அவர்களுக்கு அபராதம் விதிக்கவும், நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்புகளை பாதுகாக்கவும் காவல்துறைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வடக்கு டகோட்டாவுக்கு எதிரே உள்ள எமர்சன், மனிடோபாவிலிருந்து போராட்டகாரர்கள் வெளியேறி வருகின்றனர்.
அமெரிக்க எல்லையில் எஞ்சியிருந்த கடைசி முற்றுகையை போராட்டகாரர்கள் வெளியேறி வருகின்றனர். இதனால், கனடா – அமெரிக்கா இடையேயான போக்குவரத்து சீராகியுள்ளது மேலும் கனடா – அமெரிக்கா எல்லை மீண்டும் திறக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், கனடாவின் தலைநகர் ஒட்டாவாவின் முற்றுகை தற்போது தீவிரமடைந்து வருகிறது. போலீசார், ஒட்டாவாவின் தெருக்களை அடைத்து போராட்டக்காரர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என போலீசார் அறிவுறித்தி உள்ளனர்.