நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.முக்கியமாக நியூசிலாந்து வேக பந்து வீச்சாளர் மேட் ஹென்ரியின் பந்துவீச்சில் ரன்கள் எடுக்க தடுமாறிய அந்த அணி அடுத்தடுத்தது விக்கெட்டுகள் இழந்தது .
இதனால் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 49.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.நியூசிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய மேட் ஹென்ரி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் விளையாடிய நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்துள்ளது.ஹெண்ட்ரி நிக்கோல்ஸ் 37 ரன்களுடனும் ,நெய்ல் வாக்னர் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.