உக்ரைனில் ஆயுதப்பயிற்சியில் கலந்துகொண்ட 79 வயது பெண்.
ரஸ்யா இராணுவ நடவடிக்கைக்கு தயாராகிவரும் நிலையில் உக்ரைனில் பொதுமக்களிற்கு ஆயுதப்பயிற்சிபெற்றவேளை அதில் தன்னையும் இணைத்துக்கொண்டு பயிற்சி பெற்ற 79 வயது பெண்ணிற்கு பாராட்டுகள் குவிகின்றன.
கிழக்கு உக்ரைனின் மரியுபொல் பகுதியில் தேசிய பாதுகாவல் படையினர் பொதுமக்களிற்கு பயிற்சிகளை வழங்கியவேளை என்ற 79 வயது பெண் ஏகே 47 துப்பாக்கியை எவ்வாறு பயன்படுத்துவது என பயிற்சி எடுத்துள்ளார்.
அஜொவ் என்ற விசேட படையணி துப்பாக்கியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து அவருக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளது.
ரஸ்யாவின் இராணுவநடவடிக்கை இடம்பெறுவது உறுதி என்ற நிலையில் பொதுமக்களிற்கு பயிற்சி வழங்கி துணை இராணுவத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் உக்ரைனில் இடம்பெறுகின்றன.
பயிற்சியில் கலந்துகொண்டமைக்காக 79 வயது பெண்ணிற்கு தங்கள் பாராட்டுகளை உக்ரைன் மக்கள் தெரிவித்துள்ளனர்.
நான்குவயது நிரம்பிய சிறுவர்களிற்கு கூட பயிற்சி வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயிற்சியின் போது என்பிசி நியுஸ் செய்தியாளருக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் உங்கள் தாயாரும் இதனை செய்வார் என குறிப்பிட்டுள்ளார்.
ஏதாவது இடம்பெற்றால் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள நான் தயார் நான் எனது நகரத்தை வீடுகளை குழந்தைகளை பாதுகாப்பேன் என அவர் தெரிவித்துள்ளார். நான்பயிற்சிபெற்றேன் ஆனால் என்னால் எனது உடல்நிலை காரணமாக முழுமையான படைவீரராக மாறமுடியாது துப்பாக்கியும் என்னால் தூக்க முடியாததாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.