முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு விடுதலை.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காதது சம்பந்தமாக தொடரப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நாமல் பலல்லே, ஆதித்ய பட்டபெந்திகே மற்றும் மொஹமட் இஸ்சதீன் ஆகிய மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழன் செய்தி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மூன்று நீதிபதிகள் அடங்கிய மேல் நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், இவருக்கு எதிராக தலா 855 குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும், சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் எதனையும் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்த முடியாது இருப்பதால், பூஜித் ஜயசுந்தர விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வழக்கிலிருந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவும் இன்று முற்பகல் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.