மாணவரிடம் நெற்றியில் இருந்த திலகத்தை அழிக்க சொன்ன கல்லூரி நிர்வாகம்
கர்நாடகம் இந்தி நகரத்தில் நெற்றியில் திலகத்தை வைத்து சென்ற காரணத்திற்காக மாணவர்கள் கல்லூரிகள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளார். பின்னர், திலகத்தை அழித்துவிட்டு உள்ளே செல்லும்படி கல்லூரி நிர்வாகம் மாணவரிடம் கேட்டுக் கொண்டது.
ஹிஜாப், காவி சால்வை போன்றே நெற்றியில் வைக்கப்படும் திலகமும் பிரச்னையை கிளப்புவதாக கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதன் காரணமாக, மாணவர், ஆசிரியர்களிடையே வாக்குவாதம் முற்றியது.
கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், ஹிஜாப் மற்றும் காவி சால்வை அணிந்து கல்வி நிலையங்களுக்கு செல்ல கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், நெற்றியில் திலகம் வைக்க எந்த தடையும் விதிக்கப்படவில்லை.
இருப்பினும், கர்நாடக அரசின் உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய சிறுமிக்காக நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர், நெற்றியில் திலகம் வைப்பது, கையில் வளையல் மாட்டி கொள்வது, சீக்கியர்களின் தலைப்பாகை, ருத்ராக்ஷம் அணிந்து கொள்வதை போல ஹிஜாப் அணிவதும் மத நடைமுறை என வாதம் முன்வைத்திருந்தார்.