இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட பசுமாடுகள் வறிய மக்களுக்கு வழங்கப்பட்டது.
இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட பசுமாடுகள் கைப்பற்றி வறிய மக்களுக்கு வழங்கிய தலவாக்கலை பொலிஸார்!
கடந்த வாரம் பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் சட்டவிரோதமாக அனுமதியின்றி இறைச்சிக்காக கொண்டுசெல்லப்பட்ட 2 பசு மாடுகளை சுற்றிவளைத்து பூண்டுலோயா பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.
அதனைத்தொடர்ந்து பூண்டுலோயா கால்நடை வைத்திய அதிகாரி சம்பத்துடன் கலந்துரையாடி நீதிமன்ற அனுமதியுடன் இப்பிரதேசத்தில் பண்ணை வளர்ப்பில் ஈடுபட்டு வந்த வறிய குடும்பங்களுக்கு அந்த பசுமாடுகள் வழங்கப்பட்டன.
பூண்டுலோயா பழைய தோட்ட மேற்பிரிவில் வாழ்வாதாரமின்றி கஷ்டப்படும் கார்த்திக், தெற்கு மடக்கும்புற தோட்டத்தில் வசிக்கும் தியாகராஜா ஆகிய இருவருக்கும் இப்பசுமாடுகள் கால்நடை வைத்திய அதிகாரி சம்பத்தினால் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட பசுமாடுகளில் ஒன்று 3 மாத கர்ப்பம் தரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.