‘மொட்டு’ அரசுக்குள் மேலும் நெருக்கடி; அதிரடிக்குத் தயாராகின்றனர் 15 பேர்.

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 15 பேர் சுயாதீனமாகச் செயற்படும் முடிவுவை எடுக்கத் தயாராகி வருகின்றனர் என்று சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தியடைந்துள்ள இவர்கள், எதிர்காலத்தில் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் சம்பந்தமாக அவ்வப்போது சந்தித்துப் பேச்சு நடத்தி வருகின்றனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அரசுக்கு எதிராகச் செயற்படுவதைத் தவிர தற்போதைய நிலைமையில் மாற்று வழியில்லை எனக் கலந்துரையாடிள்ள இவர்கள், அரசு தொடர்பாக வாக்காளர்களிடம் இருந்து கிடைக்கும் அழுத்தங்கள் காரணமாக ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டும் எனவும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, டொலர் தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு,விவசாயிகளின் பிரச்சிளைகள், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால், மக்கள் மத்தியில் அரச எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது.